தேசிய செய்திகள்

டெல்லியில் அடுத்த 2 மணிநேரத்தில் லேசான மழை; இந்திய வானிலை ஆய்வு மையம் + "||" + Light rain in Delhi for next 2 hours; Indian Meteorological Department

டெல்லியில் அடுத்த 2 மணிநேரத்தில் லேசான மழை; இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லியில் அடுத்த 2 மணிநேரத்தில் லேசான மழை; இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லியில் அடுத்த 2 மணிநேரத்தில் லேசான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,

வங்காள விரிகுடா மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து உள்ளது.  இதனால் ஞாயிற்று கிழமை காலை முதல் தொடர்ந்து மழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த மழையானது, டெல்லி-என்.சி.ஆர்., பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானிலும் பெய்தது.  ஆச்சரியப்படும் வகையில் கடந்த 121 ஆண்டுகளில் இல்லாத வகையில், டெல்லியில் 24 மணிநேரத்தில் அதிகளவு மழை பெய்துள்ளது.

டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பொழிந்துள்ளது.  கடந்த 1975ம் ஆண்டுக்கு பின்பு (1155 மி.மீ.) டெல்லியில் கடந்த 4 மாதங்களில் 1139 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.

டெல்லி விமான நிலையம் உள்பட பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், வடக்கு டெல்லி, கர்முக்தேஷ்வர், பாக்பத், கைத்தல் மற்றும் ரோத்தக் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அடுத்த 2 மணிநேரத்தில் லேசான அளவில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் லேசானது முதல் மித அளவிலான மழை பெய்யும்; இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லியில் அடுத்த 12 மணிநேரத்தில் லேசானது முதல் மித அளவிலான மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
2. டெல்லி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்யும்; இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
3. கேரளாவில் பரவலாக மழை : 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
யாஸ் புயலின் தாக்கம் காரணமாக கேரளாவிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
4. யாஸ் புயல்; மேற்கு வங்காளம், உத்தரகாண்டில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம்
யாஸ் புயலானது இன்று காலை 5.30 மணி நிலவரப்படி வங்காள விரிகுடாவின் வடமேற்கில் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
5. யாஸ் புயல் தம்ரா துறைமுகம் அருகே இன்று காலை தீவிரமடையும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
யாஸ் புயல் நகர்ந்து சென்று தம்ரா துறைமுகம் அருகே இன்று காலை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.