உலக செய்திகள்

ஏவுகணை சோதனையில் மீண்டும் களமிறங்கிய வடகொரியா + "||" + North Korea test-fires "newly-developed new-type long-range cruise missiles

ஏவுகணை சோதனையில் மீண்டும் களமிறங்கிய வடகொரியா

ஏவுகணை சோதனையில் மீண்டும் களமிறங்கிய வடகொரியா
வடகொரியா இன்று தொலைதூர இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது.
பியங்யாங்,

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்கா மீதான மோதலை அதிகரிக்கும் வகையில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அணு ஆயுத வல்லமை கொண்ட வடகொரியா தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், புதிதாக உருவாக்கிய ஏவுகணையை வடகொரியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாக இந்த ஏவுகணை உள்ளது. 1,500 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியா சோதனை செய்த இந்த ஏவுகணை அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்டதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

கடந்த சில மாதங்களாக ஏவுகணை சோதனையில் ஈடுபடாத வடகொரியா தற்போது மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வடகொரியா மீண்டும் அணுஆயுத பேச்சுவார்த்தைக்கு திரும்புமா? சம்மதிக்க வைக்க அமெரிக்கா, தென்கொரியா ஒப்புக்கொண்டன
வடகொரியாவை மீண்டும் அணு ஆயுத தவிர்ப்பு பேச்சு வார்த்தைக்கு திரும்ப வைக்க அமெரிக்காவும், தென்கொரியாவும் ஒப்புக்கொண்டன.
2. வடகொரியா பொருளாதார நெருக்கடி: நூற்றுக்கணக்கான அதிகாரிகள் நீக்கம்- கிம் ஜாங் உன் நடவடிக்கை
வடகொரியா பொருளாதார சீரழிவு நூற்றுக்கணக்கான அதிகாரிகள் நீக்கி அதிபர் கிம் ஜாங் உன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
3. வடகொரியா தனது 3,000 டன் எடையிலான நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை விரைவில் சோதிக்கும் - அமெரிக்கா, தென் கொரியாவின் உளவுத்துறை அதிகாரிகள் தகவல்
வடகொரியா தனது 3,000 டன் எடையிலான நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை விரைவில் சோதிக்கும் என்று அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4. வடகொரியாவில் இதுவரை கொரோனா பரவல் ஏற்படவில்லை - அதிபர் கிம் ஜாங் அன் தகவல்
கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே வடகொரியாவில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என அந்நாட்டு அரசு கூறி வருகிறது.
5. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு இல்லை: வடகொரியா அறிவிப்பு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவது இல்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.