தேசிய செய்திகள்

அசாமில் சட்டவிரோதமாக தங்கி இருந்த மியான்மர் நாட்டினர் 26 பேர் கைது + "||" + Assam Police says it arrested 26 Myanmar Nationals

அசாமில் சட்டவிரோதமாக தங்கி இருந்த மியான்மர் நாட்டினர் 26 பேர் கைது

அசாமில் சட்டவிரோதமாக தங்கி இருந்த மியான்மர் நாட்டினர் 26 பேர் கைது
அசாமில் சட்டவிரோதமாக தங்கி இருந்த மியான்மர் நாட்டினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
கவுகாத்தி,

அசாம் மாநிலத்தின் கவுகாத்தி மாவட்டம் ரஹ்பரி பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரஹ்பரி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் சந்தேகத்திற்கு இடமாக தங்கி இருந்த 10 பெண்கள் உள்பட 26 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த 26 பேரும் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து தங்கி இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். 

மேலும், அவர்கள்கள் அனைவரும் போலியாக தயாரித்து வைத்திய இந்திய அடையாள அட்டைகளான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற பல்வேறு ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர். 

இதையடுத்து, சட்டவிரோதமாக மியான்மர் நாட்டினர் 26 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட 26 பேரும் அசாமில் இருந்து டெல்லி செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. அசாம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 70 பேர் மாயம் - தொடரும் மீட்புப்பணி
அசாம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2. அசாம் படகு விபத்து: ஒருவர் பலி - 33 பேர் மாயம்
அசாமில் இரு படகுகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
3. அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 636-பேருக்கு கொரோனா
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 636-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. அசாமில் கடும் மழை; பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு
அசாம் மாநிலத்தில் கடும் மழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
5. அசாமில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
அசாமில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.