மாநில செய்திகள்

தனுஷ் என்ற மாணவரின் தற்கொலைக்கு அரசுதான் பொறுப்பு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு + "||" + Government is responsible for the suicide of a student named Dhanush: Edappadi Palanisamy

தனுஷ் என்ற மாணவரின் தற்கொலைக்கு அரசுதான் பொறுப்பு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தனுஷ் என்ற மாணவரின் தற்கொலைக்கு அரசுதான் பொறுப்பு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தனுஷ் என்ற மாணவரின் தற்கொலைக்கு அரசுதான் பொறுப்பு என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை,

தமிழக சட்டப்பேரவை இன்று 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் கூடியது. சட்டப்பேரவை கூடியதும் நீட் தேர்வு விவகாரம் அவையில் எதிரொலித்தது.  குறிப்பாக நேற்று அதிகாலை நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட  மாணவர் தனுஷ்  தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி  அதிமுக  எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 

அவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-  நீட் தேர்வு அச்சம் காரணமாக   தனுஷ் என்ற மாணவர் தற்கொலைக்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பு. திமுக ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வு செய்யப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியிருந்தார். 

நீட் தேர்வு வேண்டாம் என்று அதிமுக அரசு தீர்மானம் கொண்டு வந்த போது எதிர்த்த திமுக தற்போது தீர்மானம் கொண்டு வருகிறது. நீட் தேர்வு பிரச்சினையில் திமுக அரசு தெளிவான முடிவு எடுத்து சொல்லவில்லை. நீட் விவகாரத்தில் அரசின் நடவடிக்கையால் மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்தனர்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி பேச்சு
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து வெற்றிபெற வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.
2. "நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்கு போட்டிருக்கலாம்" - எடப்பாடி பழனிசாமி பேச்சு
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
3. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு எடப்பாடி பழனிசாமி பேட்டி
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
4. ஒன்றிய கவுன்சிலர்கள் 6 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஒன்றிய கவுன்சிலர்கள் 6 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
5. நெல் விளைச்சல் அதிகமுள்ள மாவட்டங்களில் மூடப்பட்ட நேரடி கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும்
நெல் விளைச்சல் அதிகமுள்ள மாவட்டங்களில், மூடப்பட்டுள்ள நேரடி கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும் என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.