தேசிய செய்திகள்

ஞாயிற்றுக்கிழமைக்கும் திங்கட்கிழமைக்கும் வேறுபாடு இல்லாமல் செய்ததே மோடியின் சாதனை-ராகுல்காந்தி + "||" + Without distinction between Sunday and Monday Modi's record-Rahul Gandhi did

ஞாயிற்றுக்கிழமைக்கும் திங்கட்கிழமைக்கும் வேறுபாடு இல்லாமல் செய்ததே மோடியின் சாதனை-ராகுல்காந்தி

ஞாயிற்றுக்கிழமைக்கும் திங்கட்கிழமைக்கும் வேறுபாடு இல்லாமல் செய்ததே மோடியின் சாதனை-ராகுல்காந்தி
ஞாயிற்றுக்கிழமைக்கும் திங்கட்கிழமைக்கும் வேறுபாடு இல்லாமல் செய்ததே மோடியின் சாதனை-ராகுல்காந்தி
புதுடெல்லி

ஞாயிறு - திங்கள் இடையே வேறுபாடு இல்லாமல் செய்ததே மோடி அரசின் சாதனை என்று காங்கிரஸ்  தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். 

ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில்  அமெரிக்காவை சேர்ந்த போர்ட் நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தியை நிறுத்த முடிவு செய்திருப்பது குறித்த பத்திரிக்கை செய்தியை பகிர்ந்துள்ளார். இந்த முடிவால் 4,000 சிறு நிறுவனங்கள் மூடப்படும் என்று தொழில்துறையினர் கூறி இருப்பது அந்த செய்தியில் இடம் பெற்றுள்ளது.

அந்த பதிவில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைக்கும், வேலை நாளான திங்கட்கிழமைக்கும் இடையிலான வித்யாசத்தை முடிவுக்கு கொண்டு வந்தது தான் மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி என்று அவர் விமர்சித்துள்ளார். 

மேலும் வேலையே இல்லாத போது அது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் என்ன? திங்கட்கிழமையாக இருந்தால் என்ன? என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்!
மாணவர்கள் விஷயத்தில் மத்திய அரசு கண்மூடித்தனமாக உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2. எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் காங்கிரஸ்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை
சோனியா காந்தி தலைமையில் கூட்டணி கட்சிகள் மற்றும் ஒத்த கருத்துள்ள கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது
3. காங்கிரஸ் அரசை விமர்சிப்பதால், நாடு முன்னேறி விடாது - எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
செங்கோட்டையில் இருந்தபடி காங்கிரஸ் அரசை விமர்சிப்பதால், நாடு முன்னேறி விடாது என எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
4. அறிவிப்புகளை நிறைவேற்றுவது இல்லை, 7 ஆண்டுகளாக மோடி ஒரே பேச்சை பேசுகிறார்; காங்கிரஸ் விமர்சனம்
பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் 7 ஆண்டுகளாக ஒரே பேச்சையே பேசுகிறார். ஆனால் அறிவிப்புகளை நிறைவேற்றுவது இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
5. டுவிட்டர் விதிகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு முடக்கம்
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாக அக்கட்சி குற்றம்சாட்டி உள்ளது.