உலக செய்திகள்

தலீபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டு விமானம் + "||" + First Foreign Commercial Flight After Taliban Takeover Lands In Kabul

தலீபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டு விமானம்

தலீபான்கள் ஆட்சியில்  ஆப்கானிஸ்தானில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டு விமானம்
தலீபான்கள் உடனான அரசியல் சிக்கல்கள் காரணமாக உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான விமான போக்குவரத்தை தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளன.
காபூல்,

ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதும் அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக ஒரே நேரத்தில் லட்சக் கணக்கான ஆப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தான் உடனான நேரடி விமான போக்குவரத்தை உடனடியாக நிறுத்தின.

தலீபான்கள் உடனான அரசியல் சிக்கல்கள் காரணமாக உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான விமான போக்குவரத்தை தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலுக்கு இன்று முதல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. எனினும்,வெறும் 10 பயணிகள் மட்டுமே அதில் இருந்தனர்.  பயணிகளை விட விமான பணியாளர்கள் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. 

தலீபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானுக்கு முதல் வர்த்தக விமான சேவை தொடங்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ வார இறுதியில் வழக்கமான வர்த்தக விமான சேவைகளை தொடங்க  நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ஆனால், எத்தனை விமானங்கள் இரு நாட்டு தலைநகரங்களுக்கும் இடையேயும் இயக்கப்படும் என்பதை இப்போதே கூற முடியாது” என்றார்.  முன்னதாக கடந்த 4-ந் தேதி ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் உடனான விமான சேவை நாளை தொடக்கம்: பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதும் அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான ஆப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
2. ஆப்கான் முன்னாள் அதிபர் அறையில் துப்பாக்கியுடன் அமர்ந்துள்ள தலீபான்கள் ; வைரலாகும் போட்டோ
பஞ்ச்ஷீரை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக தலீபான்கள் அறிவித்தாலும் அதை தலீபான் எதிர்ப்புப் படை மறுத்துள்ளது.
3. தலீபான்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை: ரஷ்யா அறிவிப்பு
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்பட 6 நாடுகளுக்கு தலீபான்கள் அழைப்பு விடுத்து இருந்தனர்.
4. ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசு அங்கு அமைதியை நிலைநாட்டும் - பாகிஸ்தான் நம்பிக்கை
ஆப்கானிஸ்தானில் தற்போது அமைந்துள்ள இடைக்கால அரசு அங்கு அமைதியை கொண்டு வரும் என பாகிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
5. ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபரின் சகோதரர் கொலை- தலீபான்கள் அட்டூழியம்
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர்.