தேசிய செய்திகள்

ஸ்ரீநகர்: தேசிய நெடுஞ்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையெறி குண்டுகள் கண்டெடுப்பு + "||" + Security forces defuse 6 grenades placed along NH 44 in Srinagar

ஸ்ரீநகர்: தேசிய நெடுஞ்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையெறி குண்டுகள் கண்டெடுப்பு

ஸ்ரீநகர்: தேசிய நெடுஞ்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையெறி குண்டுகள் கண்டெடுப்பு
ஸ்ரீநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையெறி குண்டுகளை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்து செயலிழக்க செய்தனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் உள்ள பரிம்புரா-பந்தசவுக் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாலையின் அருகே வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். 

அந்த மணல் மூட்டையில் பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 6 கையெறி குண்டுகள் இருப்பதை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்தனர். 

உடனடியாக அந்த கையெறி குண்டுகளை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர் அதை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு வெடிகுண்டு நிபுணர்களால் அந்த 6 கையெறி குண்டுகளும் செயலிழக்க வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதல்: 2 பயங்கரவாதிகள் பலி
காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
2. காஷ்மீருக்குள் நுழைந்த 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவம் அதிரடி
காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேரை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது.
3. காஷ்மீரில் 7 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
காஷ்மீரில் 7 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஸ்ரீநகர் விமான நிலையத்தை தகர்க்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது.
4. காஷ்மீரில் ராணுவ வீரர் சுட்டுக்கொலை
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
5. காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.