மாநில செய்திகள்

அரசுப்பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும்: தமிழக அரசு + "||" + 40 % reservation for women in Government jobs -TN

அரசுப்பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும்: தமிழக அரசு

அரசுப்பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும்: தமிழக அரசு
அரசுப்பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
சென்னை,

அரசுப்பணி நியமனங்களில் மகளிர் இட ஒதுக்கீடு  40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று  மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இது குறித்த அறிவிப்பை  வெளியிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:- 

அரசுப்பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து  40 சதவீதமாக உயர்த்தப்படும். கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசுப்பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். 

அதேபோல், முதல் தலைமுறை பட்டதாரி, தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். போட்டித்தேர்வுகள் தாமதம் ஆனதால், நேரடி நியமனங்களில் வயது உச்ச வரம்பு 2 ஆண்டாக அதிகரிக்கப்படும். தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் ஆக்கப்படும்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தமிழக அரசு
வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2. ஏழை, எளிய, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத நிதிநிலை அறிக்கை - ஒ.பன்னீர்செல்வம்
தமிழக அரசின் பட்ஜெட்டில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
3. 6 ஆண்டுகளாக அதிகரித்துவரும் வருவாய் பற்றாக்குறையை இந்த ஆண்டு குறைப்போம்: நிதி அமைச்சர்
6 ஆண்டுகளாக அதிகரித்துவரும் வருவாய் பற்றாக்குறையை இந்த ஆண்டு குறைப்போம் என்று சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்கூறினார்.
4. லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அரசு முயல வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி
லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அரசு முயல வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
5. பள்ளிப்பாட புத்தகங்களில் 'மத்திய அரசு' என்ற பெயர் 'ஒன்றிய அரசு' என மாற்றப்படும் - திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி
பள்ளிப்பாட புத்தகங்களில் 'மத்திய அரசு' என்ற பெயர் 'ஒன்றிய அரசு' என மாற்றப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.