மாநில செய்திகள்

தாம்பரம், ஆவடியில் புதிய போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் - மு.க.ஸ்டாலின் + "||" + New Police Commissioner's Office at Tambaram, Avadi - MK Stalin

தாம்பரம், ஆவடியில் புதிய போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் - மு.க.ஸ்டாலின்

தாம்பரம், ஆவடியில் புதிய போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் - மு.க.ஸ்டாலின்
தாம்பரம், ஆவடியை தலைமையிடமாக கொண்டு தனித்தனி போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகின்றது. இன்றைய கூட்டத்தில் காவல்துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை முதல்-அமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அப்போது, "தாம்பரம், ஆவடியை தலைமையிடமாக கொண்டு தனித்தனி புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள் அமைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

தற்போது தாம்பரம், ஆவடி ஆகிய இரண்டு பகுதிகளும் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.

முன்னதாக, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட நகராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பதவி ஏற்ற 4 மாதத்தில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்: மு.க.ஸ்டாலின்
தி.மு.க.வின் 505 தேர்தல் வாக்குறுதியில் 202 வாக்குறுதிகள் 4 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்டு உள்ளன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
2. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து அரசுத் துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
3. ‘ஏழை மக்களை கைதூக்கி விடும் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது’ மு.க.ஸ்டாலின் பேச்சு
‘ஏழை மக்களை கைதூக்கி விடும் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது’ என்று மக்களை தேடி மருத்துவ மையம் திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
4. சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி வளாகத்தில் 150 ஆண்டு பழமையான ஆப்பிரிக்க ஆனைப்புளி பெருக்க மரம்
சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி வளாகத்தில் 150 ஆண்டுகள் பழமையான ஆப்பிரிக்க ஆனைப்புளி பெருக்கமரத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு அதன் சிறப்புகள் குறித்த கல்வெட்டை திறந்து வைத்தார்.
5. 77-வது பிறந்த நாள்: வைகோவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று தனது 77-வது பிறந்த நாளை கொண்டாடினார்.