மாநில செய்திகள்

நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு : எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் நன்றி + "||" + Support for the Need Exemption Bill: MK Stalin thanks Edappadi Palanisamy

நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு : எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் நன்றி

நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு : எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் நன்றி
நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
சென்னை

தமிழகத்தில் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது.

இன்றைய சட்டசபை கூட்டத்திற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்புப் பட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்தனர்.நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷ் மறைவுக்காகவும், வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் வெட்டிக் கொல்லப்பட்டதற்காகவும் கருப்பு பட்டை அணிந்து வந்ததாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகவல் தெரிவித்தனர்.

இன்று சட்டசபை கூடியதும்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. கஞ்சா விற்பனை குறித்து காவல் துறையில் புகாரளித்த வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார் 

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சட்டசபையில்  தி.மு.க. - அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில்  இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்புக்கு பின் பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர்  நீடதேர்வு விலக்கு கோரும் மசோதவுக்கு அ.தி.மு.க ஆதரவு அளிக்கும் என கூறினர்.

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது  அ.தி.மு.க. ஆட்சியில் எப்படி நீட் சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டது ? நாங்கள் எப்படி கொண்டு வந்துள்ளோம் என பாருங்கள் என கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இதற்கு பதில் அளிக்கும் போது தி.மு.க. அரசின் சட்ட முன்வடிவை படித்து பார்த்தோம்; நாங்கள் கொண்டுவந்த சட்ட முன்வடிவாகத்தான் உள்ளது. நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் சட்டமசோதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கிரது. நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் சட்ட முன் வடிவை வரவேற்கிறோம்  என கூறினார்.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நீட் மசோதாவுக்கு அ.தி.மு.க. பா.ம.க. ஆதரவு தெரிவித்த நிலையில் நிறைவேறியது.

மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த  நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது. 

நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் விடுதலை
செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் விடுதலை என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி -மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
3. நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய மசோதா சட்டசபையில் தாக்கல்
நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய மசோதாவை சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
4. சட்டசபையில் ஜெயலலிதா மரணம், கோடநாடு விவகாரம் தொடர்பாக காரசார விவாதம்
கோடநாடு விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
5. "இனி இந்தியாவின் வரலாறு தமிழ் நிலப்பரப்பிலிருந்தே தொடங்கும்"- மு.க.ஸ்டாலின்
திமுக எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதோ, அப்போதெல்லாம் அது தமிழின் ஆட்சியாக, தமிழினத்தின் ஆட்சியாகத்தான் இருந்துள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்