மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு + "||" + Adjournment of the Tamil Nadu Legislative Assembly without specifying a date

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை,

தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் ஆக.13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த ஆக.23-ஆம் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. விவாதங்களுக்கு துறை சாா்ந்த அமைச்சா்கள் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனா்.

காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக மூன்று நாள்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று காலை மீண்டும் கூடியது.

கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று நீட் தோவை ரத்து செய்யும் சட்டத் திருத்த மசோதா, உள்பட 20 முக்கிய சட்டத்திருத்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

23 நாள்கள் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்-அமைச்சர்  மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.