மாநில செய்திகள்

9 மாவட்டங்களில் 6,9-ம் தேதி 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு + "||" + Local government elections in 9 districts in 2 phases: Election Commissioner's announcement

9 மாவட்டங்களில் 6,9-ம் தேதி 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

9 மாவட்டங்களில்  6,9-ம் தேதி 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்:  தேர்தல் ஆணையம் அறிவிப்பு
9 மாவட்டங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதியும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு 9-ம் தேதியும் நடைபெறும் என மாநில தேர்தல் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,

மாநில தேர்தல் தேர்தல் ஆணையர்  பழனிகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

விடுபட்ட 9 மாவட்டங்களில் 2 கட்டமாக அக்டோபர் 6, 9 -ம் தேதி ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. வேலூர், திருபத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

* நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்படும்

* 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது. 

* 23-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செய்யப்படும்.

* 25-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம்.

* ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ம் தேதி நடைபெறும். 

* காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.

* கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம்.

* ஊரக உள்ளாட்சி தேர்தலில் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். 

* 9 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவர்.

* 9 மாவட்டங்களிலும் அக்டோபர் 16-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.

* உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.