தேசிய செய்திகள்

குறையும் தொற்று: கேரளாவில் புதிதாக 15,058 பேருக்கு கொரோனா + "||" + Kerala reports 15,058 new COVID19 cases, 28,439 recoveries and 99 deaths in the last 24 hours

குறையும் தொற்று: கேரளாவில் புதிதாக 15,058 பேருக்கு கொரோனா

குறையும் தொற்று: கேரளாவில் புதிதாக 15,058  பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,058 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

15 ஆயிரத்து 058  பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகினர். அதேநேரம் நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது சாவு எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 650 ஆக உயர்ந்திருக்கிறது.

24 மணி நேரத்தில் 91 ஆயிரத்து 885  மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், பாதிப்பு விகிதம் 16.39%.  சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் கொரோனாவில் இருந்து புதிதாக 28 ஆயிரத்து 439  பேர் மீண்டுள்ளனர். இதனால் இதுவரை இத்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41 லட்சத்து 58 ஆயிரத்து 504  ஆக அதிகரித்திருக்கிறது.