தேசிய செய்திகள்

டெல்லியில் 4 அடுக்கு கட்டிடம் இடிந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு + "||" + 2 boys killed in 4 storey building collapse in Delhi

டெல்லியில் 4 அடுக்கு கட்டிடம் இடிந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு

டெல்லியில் 4 அடுக்கு கட்டிடம் இடிந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு
டெல்லியில் 4 அடுக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததில் அந்த வழியே சென்ற 2 சிறுவர்கள் உயிரிழந்து உள்ளனர்.
புதுடெல்லி,

டெல்லியின் சப்ஜி மண்டி பகுதியில் 4 அடுக்கு கட்டிடம் ஒன்று திடீரென இன்று இடிந்து விழுந்துள்ளது.  இந்த சம்பவத்தில், அந்த வழியே சென்ற 2 சிறுவர்கள் மீது கட்டிட இடிபாடுகள் விழுந்துள்ளன.  இதில் அவர்கள் படுகாயமடைந்து உயிரிழந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து, உள்ளூர் போலீசார், டெல்லி மாநகராட்சி அதிகாரிகள், தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் மத்திய சரகம் (டெல்லி) இணை ஆணையாளர் உள்ளிட்டோர் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு உள்ளார்.  உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  சம்பவம் நடந்ததற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.  மீட்பு மற்றும் நிவாரண பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. மொபைல் கேம் விளையாடுவதில் சகோதரருடன் தகராறு; எலி விஷம் குடித்து சிறுமி தற்கொலை
மொபைல் கேம் விளையாடுவதில் சகோதரருடன் ஏற்பட்ட தகராறில் எலி விஷம் குடித்து 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
2. திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் மயக்க மருந்து கொடுத்து 3 பெண் பயணிகளிடம் கொள்ளை
டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் சென்ற நிஜாமுதின் எக்ஸ்பிரசில் மயக்க மருந்து கொடுத்து 3 பெண் பயணிகளிடம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.
3. உளுந்தூர்பேட்டை அருகே கள்ளக்காதலன் வீட்டில் பெண் மர்ம சாவு போலீசார் தீவிர விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே ஆசிரியரையும் குழந்தைகளையும் தவிக்க விட்டு கள்ளக்காதலன் வீட்டில் வசித்து வந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
4. மதுரையில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை
இலங்கையை சேர்ந்த 23 பேர் கைதான விவகாரத்தில் மதுரையில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
5. கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 3.3 கிலோ தங்கம் பறிமுதல்
கேரளாவுக்கு வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 3.352 கிலோ எடை கொண்ட தங்கம் 3 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.