உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கடத்தல்காரர்கள் உள்பட 7 பேர் சுட்டு கொலை + "||" + Seven killed in Afghanistan, including kidnappers

ஆப்கானிஸ்தானில் கடத்தல்காரர்கள் உள்பட 7 பேர் சுட்டு கொலை

ஆப்கானிஸ்தானில் கடத்தல்காரர்கள் உள்பட 7 பேர் சுட்டு கொலை
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் கடத்தல்காரர்கள் 5 பேர் உள்பட 7 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.


மஜார் இ ஷெரீப்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கே பால்க் மாகாணத்தில் கடத்தல்காரர்கள் சிலர் 2 பேரை சிறை பிடித்து வைத்துள்ளனர்.  அவர்களை விடுவிக்க பணய தொகை கேட்டு மிரட்டலும் விடுத்தனர்.  அவர்களை மீட்பதற்காக பாதுகாப்பு படையினர் சென்றுள்ளனர்.

கடத்தல் கும்பலை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.  இந்த தாக்குதலில் கடத்தல்காரர்கள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.  எனினும், கடத்தல் கும்பல் சிறை பிடித்து வைத்திருந்த 2 பேரும் துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டு விட்டனர்.

இந்த சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்தில் சாலை விபத்து; 4 பேர் உயிரிழப்பு
வங்காளதேசத்தில் பக்ரீத் பண்டிகைக்கு கால்நடைகளை வாங்க சென்ற 4 பேர் சாலை விபத்தில் உயிரிழந்து உள்ளனர்.