மாநில செய்திகள்

எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்வு; முதல்-அமைச்சர் அறிவிப்பு + "||" + MLAs' pension increased to Rs 25,000; CM Notice

எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்வு; முதல்-அமைச்சர் அறிவிப்பு

எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்வு; முதல்-அமைச்சர் அறிவிப்பு
எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.


சென்னை,

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த சட்ட முன்வடிவில், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 24ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் (எடப்பாடி பழனிசாமி) சட்டமன்றத்தில் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, எம்.எல்.ஏ. பதவி காலத்தில் இறந்தால் குடும்பத்திற்கு வழங்கப்படும் படித்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படும். முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கப்படும். இறந்துவிட்ட எம்.எல்.ஏ.க்களின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12,500ஆக அதிகரிக்கப்படும் என்றும் இது ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அரசு ஏ.சி. பேருந்தில் வாழ்க்கை துணை அல்லது உடனிருப்பவருடன் பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சட்ட முன்வடிவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஜி.வி.பிரகாஷ் - கவுதம் மேனன் முதன்முறையாக இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு
ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிகில் பட பிரபலம் வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார்.
2. கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 50 அடியை எட்டிய நிலையில், 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
3. நிபா பாதிப்பு மைசூரில் இல்லை; மக்கள் அச்சப்பட வேண்டாம்: கலெக்டர் அறிவிப்பு
மைசூரில் நிபா பாதிப்பு இல்லை என்றும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கலெக்டர் கூறியுள்ளார்.
4. நஷ்டம் காரணமாக 2 தொழிற்சாலைகளை மூடுவதாக ‘போர்டு' கார் நிறுவனம் அறிவிப்பு
நஷ்டம் காரணமாக 2 தொழிற்சாலைகளை மூடுவதாக ‘போர்டு' கார் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் 44 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
5. காவல்துறையில் 1.60 லட்சம் இணையவழி புகார்கள் பதிவு; முதல்-அமைச்சர் அறிவிப்பு
காவல்துறையில் 1.60 லட்சம் இணையவழி புகார்கள் பதிவாகி உள்ளன என முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.