மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு 2018-19ம் ஆண்டில் கிடைத்த வருவாய் 1,19,749.92 கோடி + "||" + The revenue received by the Government of Tamil Nadu in 2018-19 is 1,19,749.92 crore

தமிழக அரசுக்கு 2018-19ம் ஆண்டில் கிடைத்த வருவாய் 1,19,749.92 கோடி

தமிழக அரசுக்கு 2018-19ம் ஆண்டில் கிடைத்த வருவாய் 1,19,749.92 கோடி
தமிழக அரசுக்கு கடந்த 2018-19ம் ஆண்டில் 1,19,749.92 கோடி வருவாய் கிடைத்து உள்ளது.
சென்னை,

இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில், கடந்த 2017-18ம் ஆண்டில் வரி வருவாய் 93,736.60 கோடி, வரியில்லாத வருவாய் 10,764.01 கோடி என தமிழக அரசால் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் 1,04,500.61 கோடியாக இருந்தது.

மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட வருவாயில் மத்திய அரசின் பங்கு 27,009.71 கோடி ஆகவும், மானிய உதவி 14,679.44 கோடி என மொத்தம் 41,779.15 கோடியாக இருந்தது.  இதனையடுத்து மாநில அரசின் மொத்த வருவாய் 1,46,279.76 கோடியாக இருந்தது.

இதேபோன்று, கடந்த 2018-19ம் ஆண்டில் வரி வருவாய் 1,05,549.90 கோடி, வரியில்லாத வருவாய் 14,200.02 கோடி என தமிழக அரசால் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் 1,19,749.92 கோடியாக இருந்தது.  மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட வருவாயில் மத்திய அரசின் பங்கு 30,623.01 கோடி, மானிய உதவி 23,368.21 கோடி என மொத்தம் 53,991.24 கோடியாக இருந்தது. இதனை தொடர்ந்து மாநில அரசின் மொத்த வருவாய் 1,73,741.16 கோடியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்

1. வருவாய், காவல்துறை சார்பில் குறைகேட்பு கூட்டம்
வருவாய், காவல்துறை சார்பில் குறைகேட்பு கூட்டம்
2. டோக்கியோ பாராஒலிம்பிக்: ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்
டோக்கியோ பாராஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம் கிடைத்து உள்ளது.
3. டோக்கியோ பாராஒலிம்பிக்; உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்து உள்ளது.