மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது உறுதி: அமைச்சர் பேட்டி + "||" + Vaccination for all in Tamil Nadu: Minister Interview

தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது உறுதி: அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது உறுதி:  அமைச்சர் பேட்டி
தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது உறுதி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியில் கூறியுள்ளார்.


சென்னை,

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 28,91,021 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய சாதனை. தமிழகத்தில் இதுவரை 4,03,13,112 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 6 கோடியே 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். எனவே 66 சதவீதத்துக்கும் மேலாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தமிழக மக்களிடையே பெரிய அளவிலான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் இருந்து தடுப்பூசிகள் போதவில்லை, மக்கள் கூடுதலாக வந்துவிட்டனர் என்று தகவல்கள் வந்தன. அவ்வாறு போட முடியாமல் சென்றவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு, அவர்களை தொலைபேசியில் அழைத்து தடுப்பூசி போடப்படும்.

இதேபோல் வாரத்திற்கு ஒருமுறை மெகா கேம்ப் நடத்த இருக்கிறோம். எனவே மத்திய அரசு, தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் டெங்கு பாதிப்புகள் 156 ஆக உயர்வு
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் 28 பேருக்கு டெங்கு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 156 ஆக உயர்வடைந்து உள்ளது.
2. இமாசல பிரதேசத்தில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து
இமாசல பிரதேசத்தில் பயணிகள் ரெயில் இன்று காலை தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
3. உலகிற்கு பெரிய சவால் பருவகால மாற்றம்; மரக்கன்றுகளை நடுங்கள்: மேற்கு வங்காள கவர்னர்
உலகிற்கு பெரிய சவாலாக பருவகால மாற்றம் உள்ளது என்றும் அதனால் மரக்கன்றுகளை நடுங்கள் என்றும் மேற்கு வங்காள கவர்னர் கூறியுள்ளார்.
4. தமிழகத்தில் நேர்மையான ஆட்சியை பா.ஜ.க.தான் தரமுடியும்: கே. அண்ணாமலை
தமிழகத்தில் நேர்மையான ஆட்சியை பா.ஜ.க.தான் தரமுடியும் என கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை கூறியுள்ளார்.
5. தமிழகம் முழுவதும் 12ந்தேதி மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழகம் முழுவதும் 12ந்தேதி 40 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.