உலக செய்திகள்

ஏமனில் நிலக்கண்ணி வெடித்ததில் 15 பேர் காயம் + "||" + Fifteen people injured in a landmine explosion in Yemen

ஏமனில் நிலக்கண்ணி வெடித்ததில் 15 பேர் காயம்

ஏமனில் நிலக்கண்ணி வெடித்ததில் 15 பேர் காயம்
ஏமன் நாட்டில் நிலக்கண்ணி வெடித்ததில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 15 பேர் காயமடைந்து உள்ளனர்.
சனா,

ஏமன் நாட்டில் அல் காவ்கா மாவட்டத்தில் ஹொடெய்டா நகரில் ஹவுதி பயங்கரவாதிகள் நிலக்கண்ணி வெடியை புதைத்து வைத்து உள்ளனர்.

இதில், அந்த வழியே சென்ற வாகனம் ஒன்று சிக்கியுள்ளது.  அந்த வாகனத்தில் பயணம் செய்த பெண்கள் மற்றும் குழந்தைகள் என 15 பேர் காயமடைந்து உள்ளனர்.  அந்த வாகனமும் பகுதியளவு சேதமடைந்து உள்ளது.

இந்த சம்பவத்தில் சிக்கியவர்களை உள்ளூர்வாசிகள் மற்றும் அரசு ஆதரவு ராணுவ வீரர்கள் உடனடியாக சென்று மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.