தேசிய செய்திகள்

மேற்குவங்காளம்: 130 குழந்தைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி + "||" + 130 children hospitalised in West Bengal's Jalpaiguri with fever, dysentery

மேற்குவங்காளம்: 130 குழந்தைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி

மேற்குவங்காளம்: 130 குழந்தைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி
மேற்குவங்காளத்தில் உள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புடன் 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளுடன் 130 குழந்தைகள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 2 குழந்தைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவின் 3-வது அலை குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை உருவாக்கலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஜல்பைகுரி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், அவசியம் ஏற்படும் பட்சத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 130 குழந்தைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நிதி நிறுவன ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 12 கிலோ தங்கம் கொள்ளை
மேற்குவங்காளத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 12 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
2. மேற்குவங்காளம்: திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக்கொலை
மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது பாஜக என திரிணாமுல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
3. தேர்தலுக்கு பிந்தைய வன்முறை: சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்காள அரசு மேல்முறையீடு
மேற்குவங்காளத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆகஸ்ட் 19-ம் தேதி கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
4. மேற்குவங்காள தேர்தலுக்கு பிந்தைய வன்முறை: சிபிஐ 31 வழக்குகள் பதிவு
மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக சிபிஐ 31 வழக்குகள் பதிவு செய்துள்ளது.
5. மேற்குவங்காளம்: பாஜக எம்.எல்.ஏ. திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்...
மேற்குவங்காள பாஜக எம்.எல்.ஏ. மற்றும் பாஜக கவுன்சிலர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர்.