மாநில செய்திகள்

நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை + "||" + Neet Aspirant Commits Suicide in Ariyalur

நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை

நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை
அரியலூரில் நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அரியலூர்,

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான 'நீட்’ நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் நீட் தேர்வில் 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என நினைத்து சில மாணவ-மாணவிகள் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்துவருகின்றனர். 

இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

நீட் தேர்வு எழுதிய தினம் முதல் மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோமோ? என்ற தவறாக எண்ணத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த மாணவி கனிமொழி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.   

தற்கொலை செய்துகொண்ட மாணவி கனிமொழி 12 ஆம் வகுப்பில் 600-க்கு 562 மதிப்பெண் பெற்றிருந்தார்.    

முன்னதாக, சேலம் மாவட்டம் கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் ஏற்கனவே 2 முறை ‘நீட்’ தேர்வு எழுதி தேர்ச்சி அடையாத நிலையில், இந்த முறை 'நீட்’ எதிர்கொள்ள அச்சப்பட்டு தேர்வு நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 231 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 231 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 1 பேர் எழுதினர்.
2. தமிழகத்தில் 90 சதவீதம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்
கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாடு முழுவதும் நேற்று நீட்தேர்வு நடந்து முடிந்துள்ளது.
3. சென்னையில் 47 வயதில் ‘நீட்’ தேர்வு எழுதியவர்
மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு நேற்று நடைபெற்றது.
4. 200 கேள்விகளில் 180-க்கு பதில் அளிக்க வாய்ப்பு: ‘நீட்’ தேர்வு வினாத்தாளில் மாற்றம்
‘நீட்’ தேர்வு வினாத்தாளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 200 கேள்விகளில் 180-க்கு பதில் அளித்தால் போதும் என்ற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
5. 'நீட்' தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவிடம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கருத்துகள் பதிவு
‘நீட்' தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவிடம் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இந்த குழுவின் அடுத்த கூட்டம் வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) கூடுகிறது.