தேசிய செய்திகள்

இந்தியாவில் சற்று குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு + "||" + India Coronavirus Report on 14th Septemper

இந்தியாவில் சற்று குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் சற்று குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 25 ஆயிரத்து 404 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் (27,254) பாதிப்பை விட பாதிப்பை விட சற்று குறைவு ஆகும்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 207 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 127 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 84 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 339 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 43 ஆயிரத்து 213 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 75 கோடியே 22 லட்சத்து 38 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78 லட்சத்து 66 ஆயிரத்து 950 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.60 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.60 கோடியாக அதிகரித்துள்ளது.
2. இந்தியாவில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 54.30 கோடியாக உயர்வு
இந்தியாவில் இதுவரை செய்ய்யப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 54.30 கோடியாக அதிகரித்துள்ளது.
3. மிசோரத்தில் மேலும் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மிசோரம் மாநிலத்தில் மேலும் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.54 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.54 கோடியாக அதிகரித்துள்ளது.
5. உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.50 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.50 கோடியாக அதிகரித்துள்ளது.