தேசிய செய்திகள்

அண்டை நாடுகளின் எல்லைகளில் காத்திருக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் செயற்கைக் கோள் படங்கள் + "||" + Satellite Images Show Thousands Of Afghans At Pak Border

அண்டை நாடுகளின் எல்லைகளில் காத்திருக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் செயற்கைக் கோள் படங்கள்

அண்டை நாடுகளின் எல்லைகளில் காத்திருக்கும்  ஆப்கானிஸ்தான் மக்கள் செயற்கைக் கோள் படங்கள்
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற, அண்டை நாடுகளின் எல்லைகளில் அந்நாட்டு மக்கள் காத்திருக்கும் செயற்கைக் கோள் புகைப்படத்தை என்டிடிவி வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் , சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு , அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து , ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றி உள்ளனர் .

இந்த நிலையில் தலீபான்கள் ஆட்சிக்கு பயந்து , ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர் .

ஆப்கானிஸ்தானை  விட்டு வெளியேற , அண்டை நாடுகளின் எல்லைகளில் அந்நாட்டு மக்கள் காத்திருக்கும் செயற்கைக் கோள் புகைப்படத்தை என்டிடிவி வெளியிட்டு உள்ளது.

குறிப்பாக , ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள சமான் எல்லையில் , ஸ்பில் போல்டாக் பகுதியில் ஏராளமானோர் காத்திருக்கின்றனர் .

அதேபோல் , தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஷிர்கான் பகுதியிலும் , ஈரானை ஒட்டிய இஸ்லாம் - காலா எல்லையிலும் ஆப்கானிஸ்தான் மக்கள் தஞ்சம் கோரி காத்திருப்பது தெரிய வருகிறது .

இந்த செயற்கைக் கோள் புகைப்படம் கடந்த 6 ம் தேதி எடுக்கப்பட்டது . பாகிஸ்தான் அண்மையில் ஆப்கனிஸ்தானுடனான சமான் எல்லையை மூடியது . ஆனால் , எல்லை திறக்கப்படலாம் என்ற நம்பிக்கையுடன் உடைமைகளுடன் ஆப்கானிஸ்தான் மக்கள் காத்திருக்கின்றனர் .

பாகிஸ்தான் , சீனா , ஈரான் , தஜிகிஸ்தான் , உஸ்பெகிஸ்தான் , துர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளுடன் , ஆப்கானிஸ்தான் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து கேரளாவை சேர்ந்த 25 ஐ.எஸ் ஆதரவாளர்கள் விடுவிப்பு ; இந்தியாவுக்கு ஆபத்து
ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 25 ஐஎஸ் ஆதரவாளர்களால் இந்தியாவுக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. தலீபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டு விமானம்
தலீபான்கள் உடனான அரசியல் சிக்கல்கள் காரணமாக உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான விமான போக்குவரத்தை தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளன.
3. ஆப்கானிஸ்தான் உடனான விமான சேவை நாளை தொடக்கம்: பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதும் அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான ஆப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
4. ஆப்கான் முன்னாள் அதிபர் அறையில் துப்பாக்கியுடன் அமர்ந்துள்ள தலீபான்கள் ; வைரலாகும் போட்டோ
பஞ்ச்ஷீரை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக தலீபான்கள் அறிவித்தாலும் அதை தலீபான் எதிர்ப்புப் படை மறுத்துள்ளது.
5. தலீபான்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை: ரஷ்யா அறிவிப்பு
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்பட 6 நாடுகளுக்கு தலீபான்கள் அழைப்பு விடுத்து இருந்தனர்.