மாநில செய்திகள்

1-8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது? - பள்ளிக்கல்வி ஆணையர் ஆலோசனை + "||" + Discussion Going on Regarding Reopening of School Classed form 1 to 8th in Tamil Nadu

1-8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது? - பள்ளிக்கல்வி ஆணையர் ஆலோசனை

1-8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது? - பள்ளிக்கல்வி ஆணையர் ஆலோசனை
1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே 9 முதல் 12 வரையில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளதால் 1 முதல் 8 வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் எப்போழுது தொடங்கும் என்பதில் தொடர்ந்து குழுப்பமான சூழ்நிலை உருவாகி வருகிறது.

இந்நிலையில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பு எப்போது? என்பது குறித்து இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.

பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு ஆர்வத்துடன் வந்தனர்.
2. பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை ஆசிரியர்களிடம் அளித்த மாணவர்கள்
இன்று பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி அரியலூரில் பள்ளிக்கு வருவதற்கான பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை மாணவ, மாணவிகள் ஆசிரியர்களிடம் அளித்தனர்.
3. மாவட்டங்களில் தயார் நிலையில் 324 பள்ளிகள்
நாளை திறக்கப்படவுள்ளதால் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள 324 பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன.
4. வகுப்பறைகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிப்பு
பள்ளிகள் நாளை திறக்கப்படுவதால் தேனி மாவட்டத்தில் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
5. பள்ளிகள் திறப்பு; பெற்றோர்களுக்கு நிபுணர்கள் விடும் எச்சரிக்கை
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழலில் பெற்றோர்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.