மாநில செய்திகள்

மஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் தஞ்சை நீதிமன்றத்தில் சரண் + "||" + 6 persons surrender in Tanjore court in MJK Pramukar murder case

மஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் தஞ்சை நீதிமன்றத்தில் சரண்

மஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் தஞ்சை நீதிமன்றத்தில் சரண்
வாணியம்பாடியில் மஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
தஞ்சாவூர், 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகரைச் சேர்ந்தவர் வசீம் அக்ரம்(42). மனிதநேய ஜனநாயக கட்சியில் மாநில பொறுப்பில் இருந்த இவர், வாணியம்பாடி நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார். சம்பவம் நடந்த இரவு, ஜீவா நகர் பகுதியில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்து விட்டு இரவு 7 மணிக்கு அவ் வழியாக வந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் வசீம் அக்ரமை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று வசீம் அக்ரம் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மஜக பிரமுகர் வசீம் அக்ரம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இதன்படி வழக்கில் தேடப்பட்டு வந்த பிரவீன் குமார், அஜய், அகஸ்டின், சத்திய சீலன், செல்வகுமார், முனீஸ்வரன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 

ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டநிலையில் தற்போது மேலும் 6 பேர் தஞ்சை நீதிமன்ற நீதிபதி பாரதி முன் சரணடைந்தனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இம்தியாஸ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொலை தற்கொலைக்கு முயன்ற என்ஜினீயர் கைது
தாம்பரம் ரெயில்நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
2. விஜய் மக்கள் இயக்க கூட்டங்களில் எனது பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்
விஜய் மக்கள் இயக்க கட்சி கூட்டங்களில் எனது பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு வருகிற 27-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
3. சென்னையில் முககவசம் அணியாத 1,163 பேர் மீது வழக்கு
கொரோனா 3-வது அலையை தடுக்கும் நடவடிக்கையாக முககவசம் அணியாதவர்கள் மீது அபராத நடவடிக்கை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
4. தோழியை கொன்ற வழக்கு: அமெரிக்க ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் குற்றவாளியாக அறிவிப்பு
அமெரிக்காவில் கோடீஸ்வர ரியல் எஸ்டேட் தொழில் அதிபர், தனது தோழியை கொன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
5. சென்னை: நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி
வெளிவட்ட சாலை அமைப்பதற்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.