தேசிய செய்திகள்

கேரளாவில் புதிதாக 15,876 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 129 பேர் பலி + "||" + Kerala Logs 15,876 Fresh COVID Cases, 129 Deaths

கேரளாவில் புதிதாக 15,876 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 129 பேர் பலி

கேரளாவில் புதிதாக 15,876 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 129 பேர் பலி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,876 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்று ஒரே நாளில் 15,876 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44,06,365 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவில் இருந்து 25,654 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை கேரளாவில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 41,84,158 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 129 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22,779 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது கொரோனா சிகிச்சையில் 1,98,865 பேர் உள்ளனர். 24 மணி நேரத்தில்  1 லட்சத்து 05 ஆயிரத்து 005  மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், பாதிப்பு விகிதம் 15.12  சதவீதமாக உள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் கனமழை; 5 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை
அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, கேரளத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது
2. இடுக்கி அணை நீர்மட்டம் உயர்வு - நீல எச்சரிக்கை விடுப்பு
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3. கே-ரெயில் திட்டம் உள்கட்டமைப்பை அதிகரிக்க உதவும் - பினராயி விஜயன்
திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே அதிவேக ரெயில் தட திட்டம் கேரளாவில் உள்கட்டமைப்பை அதிகரிக்க உதவும் என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.
4. கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு "ஆரஞ்சு அலார்ட்" எச்சரிக்கை
அக்டோபர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.