தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு; டெல்லியில் 7-வது நாளாக உயிரிழப்பு இல்லை + "||" + No Covid death in Delhi for 7th consecutive day, 38 new cases in 24 hours

கொரோனா பாதிப்பு; டெல்லியில் 7-வது நாளாக உயிரிழப்பு இல்லை

கொரோனா பாதிப்பு; டெல்லியில் 7-வது நாளாக உயிரிழப்பு இல்லை
டெல்லி மக்களுக்கு மேலும் ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கு தொடர்ந்து 7-வது நாளாக கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
புதுடெல்லி,

டெல்லியில்  கொரோன வைரஸ் பரவல் கணிசமாக குறைந்துள்ளது. தொற்று பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு புதிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை இரட்டை இலக்க எண்களிலேயே பல வாரங்களாக உள்ளது. டெல்லி மக்களுக்கு  மேலும் ஆறுதல்  அளிக்கும் வகையில் அங்கு தொடர்ந்து 7-வது நாளாக கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. 

டெல்லியில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: டெல்லியில் மேலும் 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 15 பேர் குணம் அடைந்துள்ளனர். 

புதிதாக உயிரிழப்பு இல்லை.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,38,288 - ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14,12,805- ஆக அதிகரித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. மிசோரம் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரிப்பு
மிசோரம் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
2. குஜராத்தில் 8 நகரங்களில் இரவு ஊரடங்கு : மாநில அரசு அறிவிப்பு
குஜராத்தில் கடந்த 3 தினங்களாக தொற்று பாதிப்பு லேசாக அதிகரித்து வருகிறது.
3. மெகா கொரோனா தடுப்பூசி முகாம் - ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்கள்
தடுப்பூசி மையங்களில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக ஊசி போட வருபவருடன் துணைக்கு ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.
4. வங்காளதேசத்தில் 543 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன
உலக அளவில் மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் வங்காளதேசத்தில் தொற்று வேகமாக பரவியது.
5. அவிநாசியில் 3 டாக்டர்களுக்கு கொரோனா; அரசு மருத்துவமனை மூடப்பட்டது
அவிநாசியில் 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனை மூடப்பட்டு உள்ளது.