உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினுடன் இம்ரான் கான் பேச்சு- ஆப்கான் விவகாரம் குறித்து ஆலோசனை + "||" + Pak PM Imran Khan speaks with Russian Prez Putin; discusses Afghan situation

ரஷ்ய அதிபர் புதினுடன் இம்ரான் கான் பேச்சு- ஆப்கான் விவகாரம் குறித்து ஆலோசனை

ரஷ்ய அதிபர் புதினுடன் இம்ரான் கான் பேச்சு- ஆப்கான் விவகாரம் குறித்து ஆலோசனை
ரஷ்ய அதிபர் புதினுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசி வாயிலாக பேசினார்.
இஸ்லமாபாத்,

ரஷ்ய அதிபர் புதினுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசி வாயிலாக பேசினார். இந்த உரையாடலின் போது இரு தரப்பு விவகாரம், ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள சூழல் ஆகியவை குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது. 

மேலும், போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானை  உலக நாடுகள் தனித்து விடக்கூடாது எனவும் இம்ரான் கான் வலியுறுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  

ஆப்கானிஸ்தானில் அமைதி, ஸ்திரதன்மை, பிராந்திய பாதுகாப்பு, செழுமை ஆகியற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இம்ரான் கான், பொருளாதார நெருக்கடியில் இருந்து ஆப்கானிஸ்தானை காப்பாற்ற மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் இருந்து கத்தார் விமானம் மூலம் வெளியேறிய 28 அமெரிக்கர்கள்!
கத்தார் விமானம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து 28 அமெரிக்கர்கள் வெளியேறி உள்ளனர்.
2. உயர் கல்வி கற்க பெண்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கும் தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ந் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர்.
3. தலீபான் அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டாது: வெள்ளை மாளிகை
தலீபான் அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
4. தலீபான்களுடன் பாகிஸ்தானியர்கள் இருந்தனரா? பென்டகன் விளக்கம்
ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலீபான்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளனர்.
5. சீனா எங்களின் முக்கிய கூட்டாளி- தலீபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் வளமான சுரங்கங்கள் உள்ளன. சீனாவின் உதவியால் அவற்றை மீண்டும் செயல்படவைக்கலாம் என தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.