மாநில செய்திகள்

திருச்சியில் 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona damage to 3 guards in Trichy; The police station was closed

திருச்சியில் 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு

திருச்சியில் 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு
திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலைய முதல்நிலை காவலர் உட்பட 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி,

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வார காலத்தில் பல்வேறு மாவட்டங்களில் நோய்த்தொற்று சற்று அதிகரித்து காணப்படுகிறது.  குறிப்பாக, மேற்கு மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் நோய் தொற்று உறுதியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதேபோல், கேரளா மற்றும் தமிழகம் எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.  இந்நிலையில் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முதல்நிலை காவலர் உட்பட 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மொத்தம் 30 பேர் பணியாற்றி வரும் நிலையில் அனைவரும் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதனை அடுத்து, காவல் நிலையத்திற்கு முன்பாக வெளிநபர்கள் வராத வகையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் குறைந்து வரும் கொரோனா; 11,699 பேருக்கு பாதிப்பு உறுதி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,699 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. கொரோனா பாதிப்பு; பெங்களூருவில் அக்டோபர் 11 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு
கர்நாடகாவின் பெங்களூருவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு வருகிற அக்டோபர் 11 வரை இரவுநேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
3. தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. கேரளாவில் குறைந்து வரும் கொரோனா; 16,671 பேருக்கு தொற்று உறுதி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. உலகம் முழுவதும் 120 கோடி கொரோனா தடுப்பூசிகள் நன்கொடை: குவாட் நாடுகள் உறுதி
இந்தியா உள்ளிட்ட குவாட் நாடுகள் உலகம் முழுவதும் 120 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை நன்கொடையாக அளிக்க உறுதி அளித்து உள்ளது.