தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் கூடுதலாக 70 குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு + "||" + An additional 70 children in West Bengal are affected by the flu

மேற்கு வங்காளத்தில் கூடுதலாக 70 குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு

மேற்கு வங்காளத்தில் கூடுதலாக 70 குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு
மேற்கு வங்காளத்தில் கூடுதலாக 70 குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.சிலிகுரி,

மேற்கு வங்காளத்தில் சிலிகுரி மாவட்டத்தில் 70 குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 150 குழந்தைகளுக்கு இதேபோன்ற பாதிப்பு ஏற்பட்டு ஜல்பைகுரி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  இதுபற்றி மருத்துவர் சுபீர் பவுமிக் கூறும்போது, பெருமளவிலான குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் காணப்படுகின்றன.  வைரசின் பாதிப்புகளால் இவை ஏற்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

சிலிகுரி மாவட்ட மருத்துவமனையில் நிலைமை மோசமடைந்து உள்ளது.  நாள்தோறும் நோயாளிகளின் எண்ணிக்கையானது 200 முதல் 300 ஆக உயர்ந்து உள்ளது.  அவற்றில் 31 பேர் தினமும் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. உத்தர பிரதேசத்தில் 205 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் டெங்கு காய்ச்சல் பாதித்த 205 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2. தமிழகத்தில் 1,693 பேருக்கு கொரோனா: 24 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் 1,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் 24 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 120 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 120 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
4. தினசரி கொரோனா பாதிப்பு 38 ஆயிரமாக உயர்வு 369 பேர் பலி
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38 ஆயிரமாக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் நேற்று 369 பேர் பலியாகினர்.
5. சீனாவில் வறட்சி நிலை; 15 லட்சம் மக்கள் பாதிப்பு
சீனாவில் ஏற்பட்டு உள்ள வறட்சி நிலையால் 15 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.