மாநில செய்திகள்

தமிழகத்தில் வருகிற 17ல் மீண்டும் சிறப்பு தடுப்பூசி முகாம்: மா. சுப்பிரமணியன் + "||" + Special vaccination camp in Tamil Nadu again on the 17th: Ma. Subramanian

தமிழகத்தில் வருகிற 17ல் மீண்டும் சிறப்பு தடுப்பூசி முகாம்: மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் வருகிற 17ல் மீண்டும் சிறப்பு தடுப்பூசி முகாம்:  மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் வருகிற 17ந்தேதி மீண்டும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை,


தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  கடந்த ஏப்ரல் மாதம் வரை தமிழகத்தில் 58 லட்சத்து 54 ஆயிரத்து 130 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதிகரிக்கப்பட்டன. அதன் பயனாக தடுப்பூசி செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.  மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. குறிப்பாக, கேரள எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூா், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அதிகமான முகாம்கள் அமைக்கப்பட்டன. அன்றைய தினம் ஒரேநாளில் 28 லட்சத்து 91,021 நபா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

வருகிற அக்டோபா் 31ந்தேதிக்குள் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதற்காக, வாரம் ஒருமுறை இதுபோன்ற சிறப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் வரும் 17ந்தேதி மீண்டும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றாா்.

கையிருப்பில் 17 லட்சம் தடுப்பூசிகள் உள்ளதாகவும், கூடுதலாக தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து வரும் எனவும் எதிா்ப்பாா்க்கிறோம் என்றும் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் செப்டம்பர் 1ல் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு நேரில் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வரும் செப்டம்பர் 1ந்தேதி தொடங்கும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
2. உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி; வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை
உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு புள்ளியை தவற விட்டு இந்திய வீராங்கனை வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
3. திருச்சி: தனியார் பள்ளி மாணவர்கள் 1,500 பேர் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்; அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் படித்த 1,500 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
4. இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனாவால் 51 பேர் பாதிப்பு
இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனாவால் இதுவரை 51 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
5. மெகுல் சோக்சி நாட்டை விட்டு தப்பியதற்கான நம்பத்தக்க தகவல் இல்லை: ஆன்டிகுவா பிரதமர்
மெகுல் சோக்சி நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கான நம்பத்தகுந்த தகவல் எதுவும் எங்களிடம் இல்லை என ஆன்டிகுவா பிரதமர் கூறியுள்ளார்.