தேசிய செய்திகள்

ஒடிசாவில் கனமழை; 4 பேர் பலி + "||" + Heavy rain in Odisha; 4 killed

ஒடிசாவில் கனமழை; 4 பேர் பலி

ஒடிசாவில் கனமழை; 4 பேர் பலி
ஒடிசாவில் பெய்த கனமழைக்கு 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என சிறப்பு நிவாரண ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.கட்டாக்,

ஒடிசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது ஒடிசா கடலோரம் கடந்து சென்றது.  இதில், கடந்த 2 நாட்களில் சராசரியாக 155 மி.மீ. மழை பெய்துள்ளது. 

இதன் தொடர்ச்சியாக சில பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.  சில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.  இதுவரை 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையாளர் பிரதீப் ஜே ஜெனா தெரிவித்து உள்ளார்.

ஒடிசாவின் புவனேஸ்வர், கட்டாக், பத்ரக் மற்றும் வேறு சில நகர பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது.  கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா பெருமை கொள்வதற்கு காரணமான சாதனையாளர்களுக்கு பாராட்டுகள்; பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை தட்டி சென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
3. மேற்கு வங்காளத்தில் 6.8 கிலோ கடத்தல் வெள்ளி பறிமுதல்; பி.எஸ்.எப். படை நடவடிக்கை
மேற்கு வங்காளத்தில் 6.8 கிலோ எடை கொண்ட கடத்தல் வெள்ளியை பி.எஸ்.எப். படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
4. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கட்டுக்குள் வந்த கொரோனா; மத்திய பிரதேச முதல்-மந்திரி
மத்திய பிரதேசத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது என முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார்.