உலக செய்திகள்

நாடு முழுவதும் 76 கோடியை நெருங்கிய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை + "||" + The number of corona vaccines is close to 76 crore across the country

நாடு முழுவதும் 76 கோடியை நெருங்கிய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை

நாடு முழுவதும் 76 கோடியை நெருங்கிய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை
நாடு முழுவதும் மொத்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 76 கோடியை நெருங்கியுள்ளது.
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  கடந்த ஜூனில் இருந்து 18 வயது கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பெரிய அளவில் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, நேற்று ஒரே நாளில் 54 லட்சத்து 72 ஆயிரத்து 356 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.  நள்ளிரவு வெளியாகும் இறுதி அறிக்கையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

இதுவரை, 57 கோடியே 41 லட்சத்து 31 ஆயிரத்து 961 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.  18 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 370 பேர் இரண்டு டோசும் போட்டு கொண்டுள்ளனர். இதனால், நாடு முழுவதும் போடப்பட்டு உள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 75.81 கோடியை கடந்து 76 கோடியை நெருங்கி உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான்: புலம்பெயர்ந்த மக்கள் எண்ணிக்கை 6.35 லட்சம்; ஐ.நா. அமைப்பு
ஆப்கானிஸ்தானில் நடப்பு ஆண்டில் 6 லட்சத்து 35 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்து உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது.
2. இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 80.85 கோடி
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 81 கோடியை நெருங்கியுள்ளது.
3. இந்தியாவில் சாதனை அளவாக 73 கோடியை நெருங்கிய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை சாதனை அளவாக 73 கோடியை நெருங்கியுள்ளது.
4. நடிகர் தனுஷின் டுவிட்டர் பாலோயர்ஸ் எண்ணிக்கை 1 கோடி
நடிகர் தனுஷை டுவிட்டர் சமூக வலைதளத்தில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியை எட்டியுள்ளது.
5. கொலம்பியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியது
கொலம்பியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,818 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.