தேசிய செய்திகள்

கர்நாடகா: கார் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பைக் - 2 பேர் பலி + "||" + Bengaluru Car hits bike on flyover, two riders fall 40ft to death

கர்நாடகா: கார் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பைக் - 2 பேர் பலி

கர்நாடகா: கார் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பைக் - 2 பேர் பலி
கர்நாடகாவில் அதிவேகமாகமாக வந்த கார் மோதியதில் பைக்கில் சென்ற இருவர் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலத்தில் உள்ள சாலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஒரு பைக் ஓசூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அந்த பைக்கில் ஆண் மற்றும் பெண் என இருவர் பயணித்தனர்.

அப்போது அந்த மேம்பால சாலையில் வந்த கார் ஒன்று பைக் மீது பின்னால் இருந்து வேகமாக மோதியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பைக் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டது. பைக்கில் பயணம் செய்த இருவரும் மேம்பாலத்தில் இருந்து 40 அடி கீழே உள்ள சாலையில் விழுந்தனர். இந்த கோர விபத்தில் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பைக்கில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த நபரை படுகாயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்துக்குள்ள பைக் தமிழ்நாடு பதிவெண்ணை கொண்டது என்பதால் உயிரிழந்த 2 பேரும் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் நர்சிங் கல்லூரி மாணவிகள் 16 பேருக்கு கொரோனா
பெங்களூருவில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படிக்கும் 16 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. பெங்களூரு-உப்பள்ளி மார்க்கமாக இயங்கும் 3 ரெயில்களின் நேரம் மாற்றம் - தென்மேற்கு ரெயில்வே தகவல்
பெங்களூரு-உப்பள்ளி மார்க்கமாக இயங்கும் 3 ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
3. பெங்களூருவில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றம்
பெங்களூருவில் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
4. பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் - நிதின் கட்காரி தகவல்
பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
5. பெங்களூருவில் வருகிற டிசம்பர் மாதம் முதல் 90 மின்சார பஸ்கள் இயக்கம் - பி.எம்.டி.சி. அதிகாரி தகவல்
பெங்களூருவில் வருகிற டிசம்பர் மாதம் முதல் 90 மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக பி.எம்.டி.சி. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.