மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: திமுகவில் இன்று முதல் விருப்ப மனு + "||" + DMK Invites its Party Members to file Optional Petition to Contest Local body Election

ஊரக உள்ளாட்சி தேர்தல்: திமுகவில் இன்று முதல் விருப்ப மனு

ஊரக உள்ளாட்சி தேர்தல்: திமுகவில் இன்று முதல் விருப்ப மனு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
சென்னை,

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதுதவிர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கு அக்டோபர் 9-ந் தேதி தற்செயல் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என திமுக தலைமை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

* திமுக சார்பில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம்.

* மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருக்கு ரூ.10 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* ஆதிதிராவிடர், பெண்கள் பாதித்தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும்.

* விருப்ப மனுக்களை திமுக மாவட்ட செயலாளரிடமோ அல்லது அண்ணா அறிவாலயத்திலோ ஒப்படைக்கலாம்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 15-ம் தேதி திமுக முப்பெரும் விழா
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 15-ம் தேதி திமுக முப்பெரும் விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. திமுக மீது உள்ள மக்களின் நம்பிக்கை எப்போதும் நிலைத்திருக்க விரும்புகிறேன்- முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
திமுகவிற்கு வாக்களிக்காதவர்கள் கூட இப்போது தேர்தல் நடந்தால் திமுகவிற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
3. திமுக நீண்ட வரலாறு கொண்டது: திமுகவினர் வரலாறு தெரிந்தவர்கள் - அமைச்சர் நாசர்
'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் குறித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்தினை, அமைச்சர் நாசர் விமர்சனம் செய்துள்ளார்.
4. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தொடக்கம்
தமிழக முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.
5. வரும் 21-ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தலைமையில் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.