மாநில செய்திகள்

"கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான்” - செல்லூர் ராஜூ + "||" + ADMK MLA Sellur Raju Comment on PMK Leaving the Alliance in Local Body Elections

"கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான்” - செல்லூர் ராஜூ

"கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான்” - செல்லூர் ராஜூ
"கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை,

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகள், கூட்டணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. 

இதற்கிடையில், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிந்த பாட்டாளி மக்கள் கட்சி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்துள்ளது. இதனால், அ.தி.மு.க - பா.ம.க. கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகியது  குறித்து அதிமுக எம்.எல்.ஏ.-வும், முன்னாள்-அமைச்சருமான செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான், தேவையெனில் போட்டுக்கொள்வோம் இல்லையெனில் கழற்றி வைத்துவிடுவோம். கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதில் வருத்தம் இல்லை” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டி
9 மாவட்டங்களுக்கு நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
2. தனித்துப்போட்டி என பாமக எடுத்த முடிவு அவர்களுக்கு தான் இழப்பு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டி என பாமக எடுத்த முடிவு அவர்களுக்கு தான் இழப்பு என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
3. ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க வேண்டும்; அனைத்து கட்சியினரும் கோரிக்கை
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேரம் இரவு 7 மணி வரை இருப்பதை மாலை 6 மணியாக குறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் வலியுறுத்தினர்.
4. ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை தொடங்கியது
ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
5. ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.