உலக செய்திகள்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - தென்கொரியா குற்றச்சாட்டு + "||" + North Korea fires projectile toward eastern sea

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - தென்கொரியா குற்றச்சாட்டு

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - தென்கொரியா குற்றச்சாட்டு
வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளதாக தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோல்

வடகொரியா புதன்கிழமையன்று கிழக்கு கடற்பகுதியில் நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது.  சோதனையில் 800 கி.மீ. தூரத்தில் இருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது.

 ஒரே வாரத்தில் இரண்டு முறை ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆய்வு செய்து வருகின்றன. வடகொரியா வார இறுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட குரூஸ் ஏவுகணையை பரிசோதித்ததாக கூறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த தகவலை தென் கொரியா வெளியிட்டு உள்ளது.

ஏவுகணை சோதனை நடத்தி அண்டை நாடுகளுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனாவால் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும்போது வடகொரியாவில் மட்டும் கொரோனா தொற்று குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் உள்ளது.

கொரோனா அச்சத்தால் வடகொரியா தொடர்ந்து எல்லைகளை மூடிவைத்துள்ளது. அணு ஆயுத சோதனைகளால் பல்வேறு நாடுகளிடமிருந்தும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ளது வடகொரியா. பொருளாதாரத் தடைகள் காரணமாக வடகொரியா உணவுப் பஞ்சத்தையும் எதிர் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வடகொரியா ஏவுகணை சோதனை: அமெரிக்கா எச்சரிக்கை
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது சர்வதேச சமூத்திற்கு அச்சுறுத்தலானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
2. ஏவுகணை சோதனையில் மீண்டும் களமிறங்கிய வடகொரியா
வடகொரியா இன்று தொலைதூர இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது.
3. வடகொரியா மீண்டும் அணுஆயுத பேச்சுவார்த்தைக்கு திரும்புமா? சம்மதிக்க வைக்க அமெரிக்கா, தென்கொரியா ஒப்புக்கொண்டன
வடகொரியாவை மீண்டும் அணு ஆயுத தவிர்ப்பு பேச்சு வார்த்தைக்கு திரும்ப வைக்க அமெரிக்காவும், தென்கொரியாவும் ஒப்புக்கொண்டன.
4. வடகொரியா பொருளாதார நெருக்கடி: நூற்றுக்கணக்கான அதிகாரிகள் நீக்கம்- கிம் ஜாங் உன் நடவடிக்கை
வடகொரியா பொருளாதார சீரழிவு நூற்றுக்கணக்கான அதிகாரிகள் நீக்கி அதிபர் கிம் ஜாங் உன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
5. வடகொரியா தனது 3,000 டன் எடையிலான நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை விரைவில் சோதிக்கும் - அமெரிக்கா, தென் கொரியாவின் உளவுத்துறை அதிகாரிகள் தகவல்
வடகொரியா தனது 3,000 டன் எடையிலான நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை விரைவில் சோதிக்கும் என்று அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.