மாநில செய்திகள்

திமுக ஆட்சி இனி நிரந்தரமாக வேண்டும்:முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் + "||" + TN CM MK Stalin urges cadre work towards people welfare

திமுக ஆட்சி இனி நிரந்தரமாக வேண்டும்:முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்

திமுக ஆட்சி இனி நிரந்தரமாக வேண்டும்:முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்
தமிழகத்தில் நிரந்தரமாக திமுக ஆட்சி தொடர வேண்டும் என்று முப்பெரும் விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.
சென்னை,

தமிழகத்தில் நிரந்தரமாக திமுக ஆட்சி தொடர வேண்டும் என்று முப்பெரும் விழாவில் முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலின் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அண்ணா அறிவாலயத்தில் சமூக இடைவெளியுடன் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் கட்சிக்காக உழைத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர் விழாவில் பேசிய முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:-  “கட்சிக்காக உழைத்தவர்களை பெருமைப்படுத்துவதற்காக அண்ணா பிறந்தநாளான இன்று முப்பெரும் விழா நடத்தப்படுகிறது. 

தமிழ்நாட்டில் 6-வது முறையாக திமுக ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி என்பது எந்த பலனையும் எதிர்பார்க்காமல் உழைத்த தொண்டர்களால் விளைந்தது. தமிழ்நாட்டில் நிரந்தரமாக திமுக ஆட்சி தொடர்ந்திட நாம் பணியாற்ற வேண்டும்.  மாதந்தோறும், சட்டப்பேரவையில் நான் அறிவித்த ஒவ்வொரு திட்டம் குறித்தும் ஆய்வு செய்வேன்.

தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் விடியல் பிறக்க வேண்டும். திமுகவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட நாம் திமுகவுக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படும் அளவிற்கு நாம் களப்பணியாற்ற வேண்டும்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
விஜயராகவா சாலை, ஜி.என்.சாலையில் கொட்டும் மழையிலும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
2. மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை
மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
3. சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
4. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
5. கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது- முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என மு.க ஸ்டாலின்பதிவிட்டுள்ளார்.