உலக செய்திகள்

உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் பிரதமர் மோடி, மம்தா பானர்ஜிக்கு இடம் + "||" + PM Modi, Mamata and Adar Poonawalla among Time Magazine's 100 'most influential people of 2021'

உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் பிரதமர் மோடி, மம்தா பானர்ஜிக்கு இடம்

உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் பிரதமர் மோடி, மம்தா பானர்ஜிக்கு  இடம்
அமெரிக்காவை சேர்ந்த பிரபல டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்க நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி இடம் பெற்றுள்ளார்.
நியூயார்க்,

2021 ஆம் ஆண்டில் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்தப்பட்டியலில் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவன சிஇஒ  ஆதர் பூனவல்லா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

 இந்தப்பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங், இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். தலீபான் அமைப்பின் இணை நிறுவனரான முல்லா அப்துல் கானி பர்தாரும் இந்தப்பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.