மாநில செய்திகள்

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் + "||" + O. Panneerselvam insists that the Central Government should be pressured to cancel the ‘Need’ selection

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
‘நீட்’ தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,

‘நீட்' தேர்வு ரத்து என்பதற்கான சட்டப்போராட்டத்தை அரசு தொடங்கி விட்டதாகவும், கல்வியை மாநில பட்டியலுக்கு திரும்ப கொண்டு வர தி.மு.க.வும், அதன் நட்புக்குரிய சமூக நீதி இயக்கங்களும் இறுதி வரை போராடும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருப்பதை பார்க்கும்போது, இந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வராது என்பது சூசகமாக தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது


தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் என்றுதான் தி.மு.க. தலைவர்களால் மேடைக்கு மேடை முழங்கப்பட்டது. அதை நம்பித்தான் தி.மு.க.விற்கு மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், இன்றைக்கு ஆட்சிக்கு வந்தவுடன், அ.தி.மு.க. என்ன வழியை பின்பற்றியதோ அதே வழியைத்தான் தி.மு.கவும் பின்பற்றி இருக்கிறது. அதாவது, ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதற்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

தும்பைவிட்டு வாலை பிடிப்பதற்கு...

17 ஆண்டுகள் மத்திய அரசின் அமைச்சரவையில் அங்கம் வகித்த கட்சி தி.மு.க. இன்னும் சொல்லப்போனால், தி.மு.க.வின் தயவில்தான் மத்திய அரசுகளே இருந்தன. அப்போது எல்லாம் மத்திய அரசுடன் இணக்கமாக பேசி, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்காத தி.மு.க. இப்போது கல்வியை மாநில பட்டியலில் திரும்பக்கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்று கூறுவது தும்பைவிட்டு வாலை பிடிப்பதற்கு சமம்.

மத்திய அரசுக்கு அழுத்தம்

தற்போது தி.மு.க. கூட்டணிக்கு 38 எம்.பி.க்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்கள் வர உள்ளன. இந்த சூழ்நிலையில், மத்திய அரசிற்கு தேவையான அழுத்தம் கொடுத்து, ‘நீட் தேர்வு ரத்து' என்ற அறிவிப்பினை செய்யவும், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை அமையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக அரசு பணிகளில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
தமிழக அரசு பணிகளில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
2. உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு அதிகபட்ச இழப்பீட்டு தொகை - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கப்பல் மோதல்: உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு அதிகபட்ச இழப்பீட்டு தொகை - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
3. டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
மதிப்பு கூட்டு வரி வருவாயை கருத்தில் கொண்டு டீசல் விலையை தமிழக அரசு ஓரளவு குறைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
4. ‘நீட்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
‘நீட்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கவர்னரை சந்தித்து மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
5. அதிகரிக்கும் நிலக்கரி தட்டுப்பாடு: அவசர கால திட்டம் தயாரிக்க வேண்டும்
அதிகரிக்கும் நிலக்கரி தட்டுப்பாடு: அவசர கால திட்டம் தயாரிக்க வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.