உலக செய்திகள்

இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிய பாதுகாப்பு கூட்டாண்மை அறிவிப்பு! + "||" + U.S., U.K. and Australia announce new security partnership for Indo-Pacific

இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிய பாதுகாப்பு கூட்டாண்மை அறிவிப்பு!

இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிய பாதுகாப்பு கூட்டாண்மை அறிவிப்பு!
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிய பாதுகாப்பு கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
வாஷிங்டன், 

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டாண்மையை (AUKUS) அறிவித்துள்ளது. மேலும் இன்று நாம் தொடங்கும் முயற்சி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட உதவும் என்று ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் இடையே முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மையை உருவாக்குவதற்கான கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் இந்த கூட்டு அறிவிப்பை வெளியிட்டனர். இதன்மூலம் மூன்று நாடுகளுக்கிடையேயான சந்திப்புகள் மற்றும் ஈடுபாடுகளின் புதிய கட்டிடக்கலை மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் (பயன்பாட்டு AI, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் கடல் சார்ந்த திறன்கள்) ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பை வழங்கும் 

இதுதொடர்பாக பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், “புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டாண்மை (AUKUS) என்பது நமது தொழில்நுட்பம், நமது விஞ்ஞானிகள், நமது தொழில் மற்றும் பாதுகாப்பு படை ஆகியவை இணைந்து பாதுகாப்பான பகுதியை வழங்குவதற்கு ஒத்துழைப்பு தருவதாகும். 

புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டாண்மையின் முதல் பெரிய முயற்சி, ஆஸ்திரேலியாவிற்கு அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வழங்குவதாகும். இதை அடைவதற்கான சிறந்த வழியைத் தீர்மானிப்போம். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் இந்த நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவில் உருவாக்க உத்தேசித்துள்ளோம்” என்று அவர் கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டம்; 152 ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா
இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 152 ரன்கள் எடுத்துள்ளது.
2. அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொரோனாவுக்கு பலி
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொலின் பவுல் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தார்.
3. அமெரிக்காவில் இதுவரை 40.8 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடியே 50 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. அமெரிக்காவில் இதுவரை 40.43 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 89 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் இதுவரை 40.3 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 85 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.