தேசிய செய்திகள்

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குறைவான குற்றங்கள்: கோவைக்கு முதல் இடம்...சென்னை 2-ம் இடம் + "||" + Crime rate against women lowest in Tamil Nadu’s Coimbatore, Chennai: NCRB data

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குறைவான குற்றங்கள்: கோவைக்கு முதல் இடம்...சென்னை 2-ம் இடம்

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குறைவான குற்றங்கள்: கோவைக்கு முதல் இடம்...சென்னை 2-ம் இடம்
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான அதிக குற்றங்கள் பதிவான பெருநகரங்களில் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ முதல் இடம் பிடித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களில் தொடர்பாக கடந்த ஆண்டு (2020) பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு இருக்கிறது.

அந்த வகையில், இந்தியாவில் 19 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறித்த தகவல்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டது. 

அதன்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறைவாக பதிவான பெருநகரங்களில் தமிழ்நாட்டின் கோவை முதல் இடத்தையும், சென்னை இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. 

கோவை பெருநகரத்தை பொறுத்தவரை சராசரியாக 1 லட்சம் பெண்களில் 9 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது எனவும், சென்னையை பொறுத்தவரை சராசரியாக 1 லட்சம் பெண்களில் 13.4 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, சென்னையை அடுத்து பெண்களுக்கு எதிரான குறைவான குற்ற சம்பவங்கள் பதிவான பெருநகரங்களில் 3-வது இடத்தில் கேரளாவின் கொச்சி நகரம் இடம்பெற்றுள்ளது. கொச்சியில் சராசரியாக 1 லட்சம் பெண்களில் 37.5 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவின் மும்பையில் சராசரியாக 1 லட்சம் பெண்களில் 53.8 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் பெங்களூரில் 1 லட்சம் பெண்களில் 67.3 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

பெண்களுக்கு எதிராக அதிக குற்ற சம்பவங்கள் பதிவான பெருநகரங்களில் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ முதல் இடத்தில் உள்ளது. லக்னோவில் சராசரியாக ஒருலட்சம் பெண்களில் 190.7 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக என தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி போடாமல் இருக்க சாமியாடி நாடகமாடிய பெண்கள்
யாதகிரி அருகே கொரோனா தடுப்பூசி போடாமல் இருக்க அருள் வந்தது சாமியாடியது போல் நடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. 21 பெண்கள் புகார் பாலியல் சர்ச்சையில் ஹாலிவுட் நடிகர்
ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டெய்ன் மீது 80-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் கூறியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
3. கோவில்பட்டியில் இருந்து சென்னை வந்து மூதாட்டிகளை குறிவைத்து நகை, பணம் திருடிய 3 பெண்கள் கைது
கோவில்பட்டியில் இருந்து சென்னை வந்து மூதாட்டிகளை குறிவைத்து நகை, பணம் திருடிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
4. பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய திட்டம்
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் ‘தோழி' எனும் புதிய திட்டத்தை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் தொடங்கி வைத்தார்.
5. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உதவி மையம்-போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
தென்காசி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உதவி மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தொடங்கி வைத்தார்.