மாநில செய்திகள்

கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை: தங்கம், பணம், ஆவணங்கள் பறிமுதல்? + "||" + Raid at KC Veeramani premises Seizure of gold, money and documents?

கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை: தங்கம், பணம், ஆவணங்கள் பறிமுதல்?

கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை: தங்கம், பணம், ஆவணங்கள் பறிமுதல்?
கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் தங்கம், பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,

அ.தி.மு.க. ஆட்சியில் வணிகவரி துறை அமைச்சராக இருந்தவர் கே.சி. வீரமணி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் அவரது வீட்டில் இன்று காலை 6.30 மணி முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதேபோன்று, கே.சி. வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெறுகிறது. ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் உள்ள வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம் அவரது வீடு ஆகியவற்றிலும் சோதனை நடைபெறுகிறது. 
அது போல் திருப்பத்தூரில் அவருக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. இவற்றில் சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீரமணியின் உறவினர்கள், அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிரடி சோதனை நடைபெறுகிறது.

இந்த நிலையில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் தங்கம், பணம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் கலசப்பாக்கத்தில் உள்ள வீரமணியின் உறவினர் வீட்டில் இருந்து ஹார்டு டிஸ்க், பென்டிரைவ், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. மாநில கூட்டுறவு வங்கி தலைவர் வீடு உள்பட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை
மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனின் வீடு உள்பட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
2. கோவில் தங்கத்தை உருக்கும் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கோயில் தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
3. மாவோ பயங்கரவாதிகள் பயிற்சி தொடர்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. போலீசார் அதிரடி சோதனை
மாவோ பயங்கரவாதிகள் தொடர்பாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
4. சொகுசு கப்பலில் போதை விருந்து; திரைப்பட தயாரிப்பாளர் நேரில் ஆஜராக சம்மன்
கோவா சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் இம்தியாஸ் கத்ரி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
5. வரி ஏய்ப்பு புகார்: பிரபல ஜவுளிக்கடை, நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
வரி ஏய்ப்பு புகார்: பிரபல ஜவுளிக்கடை, நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை.