தேசிய செய்திகள்

கேரளாவில் புதிதாக 22,182 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 178 பேர் பலி + "||" + Kerala records 22,182 fresh Covid-19 cases, 178 deaths

கேரளாவில் புதிதாக 22,182 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 178 பேர் பலி

கேரளாவில் புதிதாக 22,182 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 178 பேர் பலி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,182 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்று ஒரே நாளில் 22,182 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44,46,228 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவில் இருந்து 26,563 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை கேரளாவில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 42,36,309 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 178 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23,165 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது கொரோனா சிகிச்சையில் 1,86,190 பேர் உள்ளனர். 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 486  மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், பாதிப்பு விகிதம் 18.25  சதவீதமாக உள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் மேலும் 8,909 பேருக்கு கொரோனா
தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 86,811- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
2. தொடரும் கனமழை; கேரளாவுக்கு ஆரஞ்சு அலர்ட்.!
கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
3. கேரளா, உத்தரகாண்ட் கனமழையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜப்பான் பிரதமர் இரங்கல்
கேரளா மற்றும் உத்தரகாண்டில் பெய்த கனமழையில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜப்பான் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
4. கேரளாவில் மேலும் 9,361 பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,361- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு
கேரளாவில் நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.