தேசிய செய்திகள்

பிரதமர் மோடி பெற்ற பரிசு பொருட்கள் ஏலம் - மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவிப்பு + "||" + E Auction of gifts received by Prime Minister Modi

பிரதமர் மோடி பெற்ற பரிசு பொருட்கள் ஏலம் - மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவிப்பு

பிரதமர் மோடி பெற்ற பரிசு பொருட்கள் ஏலம் - மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவிப்பு
பிரதமர் மோடி பெற்ற பரிசு மற்றும் நினைவுப் பொருட்களை ஏலம் விடும் நடைமுறையை மத்திய கலாச்சார அமைச்சகம் தொடங்கியுள்ளது.
புதுடெல்லி,

பிரதமர் மோடி தான் பெறும் பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை அரசின் திட்டங்களுக்கு வழங்கி வருகிறார். அந்த வகையில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,330 பொருட்களை ஏலம் விட இணையதளம் வாயிலாக நடத்தப்படும்  மின்னணு ஏல முறை(E-auction) நேற்று தொடங்கப்பட்டது. 

இந்த மின்னணு ஏலத்தில் பங்கேற்போர், இணையதளம் மூலம் அக்டோபர் 7 ஆம் தேதி வரை பங்கேற்கலாம் என மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் https://pmmementos.gov.in என்ற இணையதளம் வாயிலாக இந்த மின்னணு ஏலத்தில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றோர் அளித்த விளையாட்டு சாதனங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளன. இதன் மூலம் கிடைக்கும் நிதி, கங்கை நதியை தூய்மைப்படுத்தும் ‘நவாமி கங்கா’ திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.
2. ஆத்ம நிர்பார் பாரத் - பிரதமர் இன்று உரை
ஆத்ம நிர்பார் பாரத் சுவயம்பூர்ணா' திட்டத்தின் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்.
3. 100 கோடி தடுப்பூசி சாதனை: புதிய இந்தியாவின் விடா முயற்சி, நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி - பிரதமர் மோடி
இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது, வரலாற்றின் புதிய அத்தியாயம் என பிரதமர் மோடி கூறினார்.
4. பிரதமர் மோடிக்கு பகவத் கீதை புத்தகத்தை பரிசளித்த நமல் ராஜபக்சே
சிங்கள மொழியில் எழுதப்பட்ட பகவத் கீதை புத்தகத்தை பிரதமர் மோடிக்கு நமல் ராஜபக்சே பரிசளித்தார்.
5. ஊழலை ஒழிக்க தொடர் முயற்சி செய்து வருகிறேன் - பிரதமர் மோடி
தேச நலனை மனதில் கொண்டு அதிகாரிகள் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.