மாநில செய்திகள்

தமிழகத்தின் சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம் + "||" + Central Government recognizes Tamil Nadu's Silambam game

தமிழகத்தின் சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம்

தமிழகத்தின் சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம்
தமிழகத்தின் சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தின் சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இது குறித்து  சுற்றுசூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும், தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும் நோக்கத்திலும், மத்திய அரசின் "கேலோ இந்தியா" திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சேர்த்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி கோரப்பட்டது.

அதனையேற்று, சிலம்பம் விளையாட்டினை மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்து "புதிய கேலோ இந்தியா" திட்டத்தின் கீழான "விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல்" என்ற கூறில் சிலம்பம் விளையாட்டினை சேர்த்துள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டம் என்பது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். தற்போது ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தை ஆர்வமுடன் கற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் திருவிழாக்களிலும், கோயில் விழாக்களிலும் சிலம்ப விளையாட்டு தவறாது இடம் பெற்று வருகிறது. ஏனைய பழங்குடியின விளையாட்டுகளுடன் சேர்த்து சிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய விளையாட்டு ஆணையத்தையும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களிடம் 8.43 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு
மாநிலங்களின் கையிருப்பில் 8.43 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. மாநிலங்களிடம் 6.73 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு தகவல்
மாநிலங்களிடம் 6.73 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் அக்.31 -வரை நீட்டிப்பு
வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை வருகிற 31-ந்தேதி வரை மத்திய அரசு நீட்டித்து உள்ளது.
4. மத்திய அரசின் திட்டங்களுக்கு போட்டோ ஒட்டுவதில் மாநில அரசு தீவிரம் காட்டுகிறது - அண்ணாமலை
மக்கள் பயன்பெறும் திட்டங்களில் 80 சதவீதம் மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் தான் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
5. பண்டிகை காலங்களில் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்
பண்டிகை காலங்களில் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.