தேசிய செய்திகள்

அசாமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + Police busts camp of new terror group in Assam, 2 killed

அசாமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

அசாமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
அசாம் மாநிலத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கவுகாத்தி, 

அசாமில், ஐக்கிய போடோலாந்து விடுதலை முன்னணி என்ற புதிய பயங்கரவாத இயக்கம் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. போடோ இனத்தினருக்கு தனி மாநிலம் அமைப்பதே தங்களது லட்சியம் என்று அந்த இயக்கம் அறிவித்தது.

இந்தநிலையில், அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த புதிய பயங்கரவாத இயக்கத்தினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது.

இதில், 2 பயங்கரவாதிகள் பலியானார்கள். பயங்கரவாத முகாமை பாதுகாப்பு படையினர் அழித்தனர். துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரானில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 11 பேர் பலி , 6 பேர் காயம்
தியாலா மாகாணத்தைச் சேர்ந்த அல்-ரஷத் கிராமத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 12 பேர் பலியாகியிருக்கிறார்கள்
2. அசாம்: மின்சாரம் தாக்கி யானை உட்பட 4 விலங்குகள் உயிரிழப்பு!
அசாம் தேசிய பூங்காவில் மின்சாரம் தாக்கி யானை உட்பட 4 விலங்குகள் உயிரிழந்துள்ளது.
3. இந்து மதக்கடவுள் சிலையை அவமதித்த நபர் கைது
இந்து மதக்கடவுள் விநாயகர் சிலையை காலால் மிதிப்பது போன்று புகைப்படம் எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
4. நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை
நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை பயங்கரவாதிகள் அட்டூழியம்.
5. துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை பறித்து விட்டு ஓட்டம்: என்கவுண்ட்டரில் வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை
ஸ்ரீபெரும்புதூரில் பெண்ணிடம் துப்பாக்கி முனையில் நகை பறித்து தப்பி ஓடி பதுங்கிய வடமாநில கொள்ளையன் போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.