மாநில செய்திகள்

தடுப்பூசி முகாமில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு + "||" + Chief Minister MK Stalin at the vaccination camp

தடுப்பூசி முகாமில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

தடுப்பூசி முகாமில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சைதாப்பேட்டையில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

 கடந்த 12-ந்தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், 20 லட்சத்துக்கும் அதிகமானோர் அன்று தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். அதன்படி, 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இன்று தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்றார். பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதை ஆய்வு செய்தார். தடுப்பூசி போடுவதற்காக வரிசையில் காத்திருந்தவர்களிடம் அங்குள்ள வசதிகள் பற்றி கேட்டறிந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் மேலும் 8,909 பேருக்கு கொரோனா
தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 86,811- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
2. தமிழகத்தில் மேலும் 1,152- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,152- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கேரளாவில் மேலும் 9,361 பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,361- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ரஷியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கையில் புதிய உச்சம்
ரஷியாவை மீண்டும் கொரோனா உலுக்கத்தொடங்கியிருப்பதால், அந்நாட்டில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786- பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.