உலக செய்திகள்

கட்டாய தடுப்பூசி சான்றிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் போராட்டம் + "||" + Protest in France against compulsory vaccination certification

கட்டாய தடுப்பூசி சான்றிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் போராட்டம்

கட்டாய தடுப்பூசி சான்றிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் போராட்டம்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அரசின் கட்டாய தடுப்பூசி சான்றிதழ் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரிஸ்,

உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தந்த நாடுகளின் அரசுகள் சார்பில் இலவச தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. கொரோனா தொற்றை விரைவில் கட்டுக்குள் கொண்டு வர, பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, அங்கு பொது இடங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட சான்றிதழை பொதுமக்கள் கொண்டு வர வேண்டும் என அந்நாட்டு அரசு கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது.

பிரான்ஸ் அரசின் இந்த முடிவு அந்நாட்டு மக்களிடையே பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நாட்டின் பல பகுதிகளில் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நூற்றுக்கணக்கானோர் இணைந்து கட்டாய தடுப்பூசி சான்றிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

புகழ்பெற்ற ஈஃபில் கோபுரத்திற்கு முன்பாக கூடிய மக்கள், அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் தடுப்பூசியை கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. திருவொற்றியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கடை, வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
திருவொற்றியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கடை, வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் ஒட்ட வந்த ரெயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
2. நெற்குன்றத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகளை அகற்ற எதிர்ப்பு
நெற்குன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை க்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள்,வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றனர். மேலும் ஒரு பெண், மாடியில் இருந்து போலீசார் மீது மண்எண்ணெய் ஊற்றி எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. விளம்பர படத்தில் நடிக்க ஒப்பந்தமான மகேஷ்பாபுவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, விளம்பர படத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
4. ஆப்கானிஸ்தானில் பஞ்ச்ஷிர் எதிர்ப்பால் தலீபான்கள் ஆட்சி அமைப்பதில் சிக்கல்!
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் முடிவை இரண்டாவது முறையாக தலீபான்கள் ஒத்தி வைத்துள்ளனர்.
5. செங்கல்பட்டு அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
செங்கல்பட்டு அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் பணியை நிறுத்தினர்.