தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று குறைந்தது + "||" + Maha sees lowest 2,583 COVID-19 cases after seven months; 3,836 recover

மராட்டியத்தில் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று குறைந்தது

மராட்டியத்தில் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று குறைந்தது
மராட்டியத்தில் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
மும்பை, 

மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகளும் முழு வீச்சில் நடப்பதால், தொற்று பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை  படிப்படியாக குறைந்து வருகிறது. 

இந்த நிலையில், மராட்டியத்தில் கடந்த  7 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. மராட்டிய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,583- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து 3,836- பேர் குணம் அடைந்துள்ளனர்.  மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 41,672- ஆக உள்ளது. எனினும், கவலை அளிக்கும் விதமாக 28 பேர் இன்று தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர்.  கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி தினசரி பாதிப்பு 2,515- ஆக பதிவாகி இருந்தது. அதன்பிறகு தற்போதுதான் அந்த அளவுக்கு தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ரஷ்யாவில் ஒருவாரத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ரஷிய தலைநகர் மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,623- பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
3. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.22 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24.22 கோடியாக அதிகரித்துள்ளது.
4. கர்நாடகாவில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 349 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் இன்று 7,643 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் இன்று 7 ஆயிரத்து 643 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.